சலங்கை மரம்:- பெரு நெருப்பு சுடரின் மீது பனித் துண்டுகளை வீசி அணைக்கப் பார்த்துக் கொண்டு இருந்தது -அவனின் அந்தரங்க தூண்டுதலின் வேகம் ,அவனின் மனம் நெருப்பிற்கு பனித் துண்டுகளால் சூடு போடுவதாக எண்ணிக் கொண்டு இருந்தது ,எச்சத்தை எதிர் பார்த்தவனுக்கு மிச்சமாய் கிடைத்தது -அவனின் தியான தொடக்கத்தின் நுனியும் இருட்டறை புள்ளியாய் மட்டுமே .......இடது கலையில் அவனை இருத்தி ,இழுத்துப் பார்த்து கொண்டிருந்தது அவன் ஆன்ம வேகம் .கடிவாளமில்லாத அவனின் இடது மூச்சுக் காற்று ,தன் பாதையை அகலப் படுத்தி அலைவதற்கு இன்னும் கொஞ்சம் இடம் தேடிக் கொண்டு இருந்தது -அவனின் கடிவாள மனம்/ .அவனது குளிர்ந்த மூச்சுக் காற்று உள் இறங்கி தொட்டதும் ,மரத்தின் அடிவேரில் தொங்கிக் கொண்டிருந்த பச்சை நாகம் ,இனிய குளிரில் கிறங்கி சிலிர்த்தது ,அந்த சின்ன உலுப்பலின் சக்தி ,மரத்தை தொட்ட உடனே ,அவனின் முதல் சினுங்கல் ஓசை தொடங்கியது ,அந்த முதல் ஓசையின் சிணுங்கலே அவனை மயக்கத்திற்கு இழுத்துச் சென்றது .இது காற்சலங்கை ஓசை : மிக ... மிக.. அருகில் அவனின் பனி துளி வியர்வை தோள்களின் மேல் ,அவளுடைய மூச்சுக் காற்றின் வெப்ப உறுமல்கள் ,அவனுடைய வியர்வையை மட்டுமின்றி ,அவனையும் திங்கத் தொடங்கியிருந்தன .அவளது இடக்கால் கொலுசு அவனின் இடக்கால் மீது படர்ந்து வரும் ஓசை ,அவள் கொலுசு மணிகளில் தெரிந்தது ,இச்சைக்கு ஆரம்பமாய் அவன் உடலும் இசைய ஆரம்பித்திருப்பதை ,அவனுடைய மூச்சுக் காற்று வெப்பமாய் உணர்த்தியது ,வழக்கத்திற்கு மாறான இரவல்ல என்றாலும் ,அவனுடைய உடல் குளிர்ந்த பின்னும் ,அவன் மனம் மட்டும் குளிர வில்லை ,இரவு விடியல் ஆகி கொண்டிருந்தது கொஞ்சம் புரிந்தது .இடது புறத்தில் அவளின் ஆழமான தூக்கம் எனக்கு ஏன் ? தூக்கம் இல்லை என்ற கேள்வியை எழுப்பியது , உணவை எடுத்துக் கொள்வது எப்படி ?என்பது அவளது அக வாய்க்கு தெரிந்தே இருந்தது என்பது -அவளின் துயிலின் மலர்ச்சி உணர்த்திக் கொண்டிருந்தது , அவளது அறிமுகத்தில் ,என் பெயர் "மாயா" என்ற போது புரியாதது ,இப்பொழுது புரிவது போல் இருந்தது . ............................................................................................................................................இது அந்தர சலங்கை :-பத்மாசனமிட்டு அமர்ந்த போது இருந்த உத்வேகம் ,அவனின் உள் பயணத்தின் தொடக்கத்திலேயே ,சரிய தொடங்கியிருந்தது ,நினைவலைகளின் சகலப் பக்கங்களிலும் -அவளின் கொஞ்சல் ,அம்மாவின் கெஞ்சல் ,நண்பர்களின் தூண்டுதல் ,அவனின் ஆசைகள் ,இயலாமைகள் ,எதிராளிகளின் புகழ்ச்சிகளும் ,இகழ்ச்சிகளும் ,இலக்கற்ற நிராசைகளும் -நிரம்பி வழிந்து பாதையை மறைத்து ,குறுக்கு ஓட்டம் நடத்திக் கொண்டு இருந்தன .புறத்திலே கோபத்தையும் ,இயலாமையையும் வெளிப் படுத்தும் அவனால் ,இப்பொழுது பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடிந்தது ,தவ்விக் குதித்து ஓட இது என்ன ?தடை ஓட்டமா !-மனம் முதன் முதலில் புன்னகையுடன் சிரிக்கத் தொடங்கியிருந்தது .என் பெயர் "மாயா "என்று அவள் சிரித்தது ஏன் ?என்று முற்றிலும் ,புரியத் தொடங்கியிருந்தது ,எல்லாமே நான்தான் என்று ,அவன் உள்முக வாசல் தொடக்கத்தில் நின்று , அவள் சிரித்துக் கொண்டிருந்தாள் , அவள் தன் இடக் காலை தூக்கி ,சலங்கையை ஆட்டிய வேகத்தில் ,அவனின் கடந்த கால -காமம் ,உயிர்ப்பு ,மோகம் ,புணர்ச்சி ,இச்சைகள் ,வேகம் ,நுகர்வு ,அவயங்கள் ,உரசல்கள் ,வேட்கைகள் ,திருட்டுத்தனங்கள்,பசுமைகள் ,கலைகள் ,கவிதைகள் ,பாச வேசங்கள் ,ஆண்மை எழுச்சிகள் ,அழகு உணர்ச்சிகள் ,அநியாய உணர்ச்சிகள் எல்லாம் படத் துகள்களாய் ,அவளது காலடியில் படர்ந்து விழுந்தன .அவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் வலக் கால் தூக்கி ,சலங்கையை ஆட்டிய கணத்தில் ,அவனின்-கோபங்களும் ,தாபங்களும் ,வீரமும் ,ஆண்மையும் ,சாகாசங்களும் ,துக்கமும் ,துயிலின்மையும் ,இயலாமையும் ,ஈகையும் ,அன்பும் ,அருளும் ,தாய்மையும் ,தவமும் ,பயணமும் ,பயமும் ,இருப்புகளும் -தன் படத் துகள்களாக ,அவளின் காலடியில் கொட்டி நிரப்பியது .அவனின் தியானத்தின் தொடக்கம் கூனி குறுகி கொண்டது . .
இது பாதச் சலங்கை ஒலி :-திரும்பி ஓடி விடவே அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது ,பயத்தில் மனம் நடுங்கிக் கொண்டு இருந்தது .இத்தனைக்கும் நடுவே யாரோ அவனை உற்றுப் பார்த்துக் கொண்டுருப்பது போல் ஒரு உணர்வு ......திரும்பியவுடன் தெரிந்தது ....பாதக் குறடு -திருவடியுடன் அவர் நின்று கொண்டிருந்தார் ....அவன் கண்களை தாழ்த்தி ,அவர் பாதத்தை பார்த்து ,அழத் தொடங்கியிருந்தான் ,சட்டென பெருங்குரலெடுத்து சிரித்து விட்டு ,புன்னகையுடன் அவனை நோக்கி ,சத்தமாக ,"""""""'சகலவற்றையும் தாயாகப் பாரடா !"""அவள் வழி விடுவாள் ,என்று கூறி ,கண்களால் ""போ" என்று ,சைகை காட்டி மறைந்தார் .சிறிய அமைதிக்குப்பின் கொஞ்சம் தெளிந்த மனதுடன் ,திரும்பி ,இடக் காலை எடுத்து வைக்க எண்ணிய பொழுதே ,அவள் அவன் கொட்டிய படத் துண்டுகளை ,கிளறி ,தேடி எடுத்து ,அவன் படங்களையே பாதையாக ,அவன் காலடியின் கீழே வைத்தாள் ...அவனின் பயணம் தொடங்கிய போது ,வாசலருகே பசுமையும் ,வெளிச்சமும் எட்டிப் பார்க்க தொடங்கியிருந்தன .......ஆனால் ,அவனின் -காமம் ,குரோதம் ,மோகம் ,மதம் ,மாச்சர்யம் ,இடும்பை ,அகங்காரம் எல்லாம் ,அவன் பின்னால் நின்று ,ஒப்பாரி வைத்து கொண்டு இருந்தன ..அவனின் பிரிவை எண்ணி ....அவன் மனம் மறுபடியும் பயப் பட ஆரம்பித்தது ....
சனி, 26 ஜனவரி, 2013
சிவ நடனக் கதைகள் -அட்ட கர்மம் -2-பேதனம் (உன் மௌனத்தின் சலனங்களை மீறி வா !)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக